தேசிய அளவிலான ‘வூசூ’ போட்டிக்கு தஞ்சையில் வீரர், வீராங்கனைகள் தேர்வு தமிழகம் முழுவதிலும் இருந்து 100 பேர் பங்கேற்பு
தேசிய அளவிலான ‘வூசூ’ போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100 பேர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
தேசிய அளவிலான வூசூ போட்டி இந்த மாதம் 2-வது வாரம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழகத்திலும் இருந்து அணி கலந்து கொள்கிறது. இதற்கான தமிழக அணி தேர்வு தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த தேர்வு தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்ட வூசூ அசோசியேசன் சங்க செயலாளர் முபாரக், தலைவர் தங்கபாண்டியன், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
100 பேர் பங்கேற்பு
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 19 வயதுக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 22 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆண்கள் பிரிவில் 11 எடை பிரிவுகளிலும், பெண்கள் பிரிவில் 9 எடைப்பிரிவுகளிலும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story