மாவட்ட செய்திகள்

மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு + "||" + Inspection of the Deputy Director of Agriculture for Spraying Drugs in Maize

மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு

மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
பெரியநாகலூரில் மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு.
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பு பணி உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் நடைபெற்றது. இந்த பணியை அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் 20 நாள் முதல் 45 நாட்கள் வரை உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு மட்டும் மருந்து தெளிப்பு பணி நடைபெறும் என்றார். மேலும் பெரிய நாகலூர் கிராமத்தில் 20 எக்டர் பரப்பரளவில் அனைத்து பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி விரைந்து முடித்திட உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறைகள் பற்றி வேளாண்மை அலுவலர் சவீதா எடுத்துரைத்தார். அப்போது வேளாண்மை உதவி அலுவலர்கள் வேல்முருகன், சுப்பிரமணியன், ராஜாகிரி, ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனார். இதே போல் அருங்கால், சிறுவளூர், அரியலூர் வடக்கு ஆகிய கிராமங்களில் மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பு பணி நடைபெற்று வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
2. பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் தலைமைப்பொறியாளர் வேண்டுகோள்
பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ரூ.18 கோடியில் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி தமிழக போக்குவரத்து துறை ஆணையாளர் ஆய்வு
நெல்லை அருகே ரூ.18 கோடியில் அமைய உள்ள கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியை தமிழக போக்குவரத்து துறை ஆணையாளர் ஜவஹர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. பணியின்போது செல்போன் பேச்சை தவிருங்கள் போக்குவரத்து போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுரை
பணியின்போது செல்போன் பேசுவதை தவிருங்கள் என்று போக்குவரத்து போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுரை வழங்கினார்.
5. திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.