எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர் + "||" + SSLC 2,602 students wrote the National Review Examination for Students
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர்
கரூரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வினை 2,602 பேர் எழுதினர்.
கரூர்,
ஏழை-எளிய பள்ளி மாணவ, மாணவிகளின் ஆற்றலை கண்டறிந்து அவர்களது கல்விக்கு உதவும் பொருட்டு ஊக்கத்தொகை வழங்குவதற்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 9 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இதனை எழுதுவதற்காக 2,782 பேர் பதிவு செய்திருந்தனர். எனினும் இந்த தேர்வினை 2,602 பேர் கலந்து கொண்டு எழுதினர். 180 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதிகாரிகள் ஆய்வு
கரூர் மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் உள்பட கல்வி அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? தேர்வெழுதுவதில் மாணவர்களுக்கு ஏதும் வசதி குறைபாடு இருக்கிறதா? என்பன உள்ளிட்ட கோணங்களில் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரூர் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களிலும், குளித்தலை கல்வி மாவட்டத்தில் 2 மையங்களிலும் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகளில் தமிழகத்திற்கான பத்ம விபூஷண் விருதுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுக்கு சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சிவில் சர்வீசஸ் தேர்வுதான் உச்சத்தேர்வு. அதுபோல தமிழக அரசு பணிகளுக்கான தேர்வில் உச்சம் பெறுவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு.