மாவட்ட செய்திகள்

முகநூல் மூலம் மலர்ந்த காதல் தோல்வி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Bloody Love Failure by Face: Suicidal Suicide

முகநூல் மூலம் மலர்ந்த காதல் தோல்வி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

முகநூல் மூலம் மலர்ந்த காதல் தோல்வி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கொல்லங்கோடு அருகே முகநூல் மூலம் மலர்ந்த காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை குருசடிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட், மீனவர். இவருக்கு மனைவியும், ஒரு மகளும், 4 மகன்களும் உள்ளனர். இதில், 3-வது மகன் ஜீசன் (வயது 22). இவர், தந்தையுடன் மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்தார்.


ஜீசனுக்கு முகநூல் மூலம் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட் டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால், ஜீசன் தினமும் அதிக நேரத்தை முகநூலிலும், அந்த பெண்ணிடம் செல்போனில் பேசுவதிலும் கழித்து வந்தார். இதனை அவரது நண்பர்களும், பெற்றோரும் கண்டித்து வந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீசனுக்கும் முகநூல் மூலம் பழகிய பெண்ணுக்கும் இடையே திடீரென செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், காதல் முறிந்ததாகவும் தெரிகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த ஜீசன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று மாலை வீட்டில் உள்ள அனைவரும் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, அங்குள்ள ஒரு அறையில் ஜீசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜீசனின் தந்தை வின்சென்ட் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகநூல் மூலம் மலர்ந்த காதல் தோல்வி அடைந்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தற்கொலை
சின்ன காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
2. அரிவாளால் வெட்டி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை
தாம்பரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.
3. தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை
புதுக்கோட்டை அருகே மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
5. கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.