மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,372 மாணவ, மாணவிகள் எழுதினர் + "||" + A total of 4,372 students and students wrote proficiency exams in 14 centers across the district

மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,372 மாணவ, மாணவிகள் எழுதினர்

மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,372 மாணவ, மாணவிகள் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 14 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 372 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
நாமக்கல்,

தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்வு நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல் கல்வி மாவட்டத்தில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ராசிபுரம் அண்ணாசாலை அரசு பள்ளி உள்பட 6 மையங்களிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் திருச்செங்கோடு அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 8 மையங்களிலும் என மொத்தம் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.


4,372 பேர் எழுதினர்

இந்த தேர்வை எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 711 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 339 பேர் தேர்வை எழுதவரவில்லை. மீதமுள்ள 4 ஆயிரத்து 372 பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை 2 தாள்களாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், திருச்செங்கோடு கல்வி அலுவலர் ரவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்-2 படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,250-ம், அதன் பிறகு முதுகலை படிப்பை முடிக்கும் வரை 5 ஆண்டுகள் மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் 2-வது நாளாக காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
2. தஞ்சையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு 518 பேர் பங்கேற்பு
தஞ்சையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 518 பேர் கலந்து கொண்டனர்.
3. திருச்சியில் காவலர் உடல்தகுதி தேர்வு தொடங்கியது முதல் நாளில் 530 பேர் தேர்ச்சி
திருச்சியில் காவலர் உடல்தகுதி தேர்வு தொடங்கியது. முதல் நாளில் 530 பேர் தேர்ச்சி பெற்றனர்.
4. 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு சேலத்தில் 705 பேர் பங்கேற்பு
சேலத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 705 பேர் பங்கேற்றனர்.
5. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர்
கரூரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வினை 2,602 பேர் எழுதினர்.