தாராபுரம் அருகே, மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி
தாராபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலியானான்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம், மேற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. தொழிலாளி. இவரது மகன் வேல்முருகன். இவன் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக வேல்முருகன் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து தளவாய்பட்டிணத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வேல்முருகன் சிகிச்சை பெற்றான். ஆனால் அவனுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் காய்ச்சலால் வாந்தி எடுத்துள்ளான். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவனை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மாணவன் வேல்முருகன் பரிதாபமாக இறந்தான். வேல்முருகன் மர்ம காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் தளவாய்பட்டிணம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து, அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story