கூட்டுறவு வங்கி மோசடி குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்


கூட்டுறவு வங்கி மோசடி குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Nov 2019 4:00 AM IST (Updated: 4 Nov 2019 5:40 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கி மோசடி குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை, 

ரஜினிகாந்த் மிகச்சிறந்த நடிகர். அதனால் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடைபெற்றது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் தமிழக அரசு சரியான முறையில் ஆவணங்களை தாக்கல் செய்யாததால் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் தப்பிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா அ.தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல் வருகிறதே? என நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கும் இதேபோல் ஒரு தகவல் வருகிறது என்று அவர் பதிலளித்தார். 

Next Story