கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்து வந்த போது, விசாரணை கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு - போலீசார் வலைவீச்சு
கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்து வந்த போது விசாரணை கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
பெரும்பாவூர்,
ஆலப்புழா மாவட்டம், காயன்குளம் அருகே உள்ள தேசத்தினகம் பகுதியை சேர்ந்தவர் அப்புண்ணி (வயது 35). இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். இவர் காயன்குளம், வளஞ்சநடா, செட்டிகுளங்கரா ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கூலிப்படைகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்று கூறப்படுகிறது.
இவர் மீது ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் திருக்குன்னபுழா பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் இவரை போலீசார் கைது செய்து மாவேலிக்கரா கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாவேலிக்கரா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது கோர்ட்டு அருகேயுள்ள ஒரு ஓட்டலில் பாதுகாப்புக்காக வந்த ஆயுதப்படையை பாதுகாப்புடன் அப்புண்ணி சாப்பிட்டு விட்டு கை கழுவ செல்வதாக சென்றார். அப்போது திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் ஓட்டலில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து மாவேலிக்கரா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அப்புண்ணியை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோர்ட்டு வளாகத்தில் கைது தப்பி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story