மாவட்ட செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே கண்டக்டர் தற்கொலை வி‌ஷம் குடித்து விட்டு காப்பாற்றும்படி நண்பர்களிடம் கெஞ்சிய பரிதாபம் + "||" + Conductor suicide near Aralwaizu Pity of friends begging to be saved

ஆரல்வாய்மொழி அருகே கண்டக்டர் தற்கொலை வி‌ஷம் குடித்து விட்டு காப்பாற்றும்படி நண்பர்களிடம் கெஞ்சிய பரிதாபம்

ஆரல்வாய்மொழி அருகே கண்டக்டர் தற்கொலை வி‌ஷம் குடித்து விட்டு காப்பாற்றும்படி நண்பர்களிடம் கெஞ்சிய பரிதாபம்
ஆரல்வாய்மொழி அருகே மினிபஸ் கண்டக்டர் வி‌ஷம் குடித்துவிட்டு, காப்பாற்றும்படி நண்பர்களிடம் கெஞ்சினார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே கண்ணன்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், அரசு  போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர். இவருடைய மகன் நாகர்மணி பூதநாதன் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நாகர்மணி பூதநாதன் குளத்து பகுதிக்கு சென்று வி‌ஷம் குடித்தார். சிறிது நேரத்தில் செத்து விடுவோம் என்று பயந்த அவர், வேகமாக ஊருக்குள் ஓடி வந்து நண்பர்களை சந்தித்து பேசினார். அப்போது மன வேதனையால் வி‌ஷம் குடித்து விட்டேன். ஆனால் இப்போது எனக்கு சாக விருப்பம் இல்லை. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினார். இதனால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே, அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை நாகர்மணி பூதநாதன் பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததாகவும், அதனால் அவர் வி‌ஷம் குடித்ததாகவும் தெரிய வந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் சிறையில் பரபரப்பு விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி
வேலூர் சிறையில் விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
2. வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீசு ஒட்டியதால் டிக்டாக்கில் பிரபலமான பெண் தற்கொலை முயற்சி
திருப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்று நோட்டீசு ஒட்டப்பட்டதால், டிக்டாக்கில் பிரபலமான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. பெருந்துறை அருகே 3 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை
பெருந்துறை அருகே 2-வதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரமடைந்த தாய், 3 மாத குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. கடலூரில், தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை
கடலூரில் தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-