தொப்பூர் கணவாயில் 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது


தொப்பூர் கணவாயில் 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 5 Nov 2019 4:00 AM IST (Updated: 5 Nov 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

நல்லம்பள்ளி,

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். உடன் கிளனர் வந்தார். இந்த லாரி நேற்று மாலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர், கிளனர் ஆகிய 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததால் அந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story