கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நல உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்


கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நல உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நல உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, மாணவர்கள் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 397 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நல உதவி

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மருத்துவ துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்த மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மருந்து மற்றும் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார். இந்த கூட்டத்தில் தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவம், டாக்டர் கைலாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை அலுவலர் அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story