மாவட்ட செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டியில், மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி + "||" + In Pappireddipatti, Schoolgirl dies of mysterious fever

பாப்பிரெட்டிப்பட்டியில், மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

பாப்பிரெட்டிப்பட்டியில், மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
பாப்பிரெட்டிப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியானார்.
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி தேவகி. இவர்களது மகள் பரணிஸ்ரீ (வயது11). சிறுமி பாப்பிரெட்டிப்பட்டி ஜீவா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் லோகநாதன் தனது மகளுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பரணிஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதனால் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்ததால் ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் வீரபத்திரன் கோவில் தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சின்னசேலம் அருகே, மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சின்னசேலம் அருகே மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மர்ம காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
2. உளுந்தூர்பேட்டை அருகே, மின்சாரம் தாக்கி மாணவி பலி
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. திருச்செந்தூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி
திருச்செந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழந்தாள்.
4. கோவில்பட்டி அருகே பரிதாபம், மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
கோவில்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
5. கும்பகோணம் அருகே, மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி
கும்பகோணம் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியானது.