பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 36 ஏக்கர் குளம் ஆக்கிரமிப்பு அகற்றம் 62 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 36 ஏக்கர் குளம் ஆக்கிரமிப்பு அகற்றம் 62 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 7:37 PM GMT)

கறம்பக்குடி அருகே 62 ஆண்டுகளாக ஆக் கிரமிக்கப்பட்டிருந்த 36 ஏக்கர் குளம் ஆக் கிரமிப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ராங்கியன்விடுதி கிராமம் உள்ளது. இங்கு 98 ஏக்கர் பரப்பளவில் ராங்கியன் குளம் உள்ளது. பாசனகுளமான இதிலிருந்து அப்பகுதி விவசாயிகள் பல ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1957-ம் ஆண்டு தொடங்கி அந்த குளத்தின் நிலபரப்புகளை சிலர் ஆக்கிரமித்தனர். தற்போது அந்தகுளத்தின் நிலபரப்பில் 36 ஏக்கர், 20 நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் நெல், கரும்பு, வாழை, கடலை என பயிரிட்டு வந்தனர். குளத்தின் பரப் பளவு குறைந்து, வரத்து வாரிகளும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்ததால் குளத்தில் தண்ணீர் தேக்காமல் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுபடி 7½ ஏக்கர் பாசன குளம் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ராங்கியன்விடுதி விவசாயிகள் சார்பில், அக் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் புதுக்கோட்டை கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் 36 ஏக்கர் ராங்கியன் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று ராங்கியன்விடுதி, ராங்கியன் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் 36 ஏக்கரில், 20 நபர் களால் எழுப்பப்பட்டிந்த வரப்புகள், மரங்கள் போன்றவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மேலும் குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அதன்மொத்த பரப்பளவில் எல்லைகல் நடப்பட்டது. இப்பணிகளை கறம்பக்குடி தாசில்தார் வில்லியம்மோசஸ், பொதுபணித்துறை பொறியாளர் ராஜவேலு, வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா ஆகியோர் கண்காணித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து அப்பகுதியில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டதன் மூலம் 62 ஆண்டு களாக நடைபெற்ற பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்ட தாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story