எடியூரப்பாவுடன் தேவேகவுடா செல்போனில் பேச்சு; ‘உங்கள் அரசை கவிழ விடமாட்டோம்‘ என உறுதி
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்றது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
பெங்களூரு,
எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா அரசு அமைந்தது. கூட்டணி அரசு கவிழ, சித்தராமையாவே காரணம் என்று தேவேகவுடா மற்றும் குமாரசாமி ஆகியோர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்கள். இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசு கவிழ்ந்துவிடும் என்று சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை விரும்பவில்லை என்று தேவேகவுடா கூறியுள்ளார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை தேவேகவுடா செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, உங்கள் அரசை கவிழ விடமாட்டோம் என்று உறுதியளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தேவேகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், எடியூரப்பாவை தொடர்பை கொண்டு பேசவில்லை என்றும், அவ்வாறு வெளியான தகவல்கள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story