தேவகோட்டையில் விளையாட்டு போட்டிகள்


தேவகோட்டையில் விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 6 Nov 2019 4:00 AM IST (Updated: 6 Nov 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தேவகோட்டை,

சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகின்றன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை தாங்கினார். தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, சிவகங்கை கல்வி மாவட்ட அலுவலர் அமுதா, திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் பரமதயாளன், தே பிரித்தோ பள்ளி தாளாளர் வின்சென்ட் அமல்ராஜ் அடிகளார், வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டிகளின் பொது செயலாளரும், பள்ளி தலைமையாசிரியருமான ஆரோக்கியசாமி அடிகளார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தமிழாசிரியர் அன்பரசன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களும் தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தில் இது போன்ற போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் போட்டிகளில் சிறப்பான முறையில் பங்கு பெற வேண்டும் என்று பேசினார்.

ஒலிம்பிக் கொடி

இதில் வருவாய் மாவட்ட கொடி, ஒலிம்பிக் கொடி ஆகியவை ஏற்றி வைக்கப்பட்டன. தேசிய, மாநில அளவிலான சாதனையாளர்கள் ஏந்தி வந்த ஒலிம்பிக் தீபம் விழாவில் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஒரு வாரத்திற்கு நடைபெற உள்ளன. நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் ஆரோக்கிய ஈசாக் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பிரபாகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story