ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த விதிமுறைகளில் மாற்றம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த விதிமுறைகளில் மாற்றம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 12:12 AM GMT (Updated: 6 Nov 2019 12:12 AM GMT)

ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த தேவைப்பட்டால்நடைமுறையில் உள்ளவிதிமுறைகளில்மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மும்பை, 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மும்பையில் தேசிய பங்கு சந்தையின் 25-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் ரியல் எஸ்டேட் துறையை புதுப்பிக்க உதவவில்லை. ஆகஸ்டு மாதத்தில் இருந்து ரியல் எஸ்டேட் சந்தை மற்றும் வாங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுவரை நான் தொடாத இந்த துறையில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தேவைப்பட்டால் இப்போது உள்ள விதிமுறைகளில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துறையில் முதலீடு செய்ய நிதி தயாராக இருந்தாலும் கொள்கை ரீதியான ஆதரவும் தேவைப்படுகிறது. இப்போது இந்த துறையில் நேர்மறையான தாக்கம் வெளிப்பட தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story