மாவட்ட செய்திகள்

திருவாரூரில், நாளை உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் பங்கேற்கிறார் + "||" + AIADMK to hold local elections tomorrow in Thiruvarur Minister Kamaraj attends consultation meeting

திருவாரூரில், நாளை உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் பங்கேற்கிறார்

திருவாரூரில், நாளை உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் பங்கேற்கிறார்
திருவாரூரில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் காமராஜ் பங்கேற்கிறார்.
கொரடாச்சேரி,

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவாரூர் ஆரூரான் திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார். கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர் கோ.அருணாசலம் தலைமை தாங்குகிறார். கட்சியின் அமைப்புச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் கே.கோபால் முன்னிலை வகிக்கிறார்.


உள்ளாட்சி தேர்தல்

கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. முன்னதாக திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்கிறார். முடிவில் ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன் நன்றி கூறுகிறார்.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, விவசாய பிரிவு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட பிற அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.18 லட்சத்தில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் அமைச்சர் திறந்துவைத்தார்
கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ரூ.18லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
2. தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்ட 4-ம் கட்ட பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்ட 4-ம் கட்ட பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் இன்பதுரை எம்.எல்.ஏ. தகவல்.
3. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 41 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
4. விழாக்கோலம் பூண்டது அயோத்தி; ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை: பிரதமர் மோடி பங்கேற்கிறார்
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
5. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமன ஆணை அமைச்சர் வழங்கினார்
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமன ஆணை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.