மாவட்ட செய்திகள்

மழையால் வாழைப்பயிர் சேதம்: விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை + "||" + Banana crop damage by rain Farmer Suicide by drinking poison

மழையால் வாழைப்பயிர் சேதம்: விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை

மழையால் வாழைப்பயிர் சேதம்: விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி அருகே மழையால் வாழைப்பயிர் சேதம் அடைந்ததால் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பிரமையாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 57), விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலை குத்தகைக்கு எடுத்து உள்ளார். அதில் சமீபத்தில் வாழைப்பயிரிட்டு உள்ளார். இதனால் சேகர் தினமும் வயலுக்கு சென்று வாழைப்பயிர்களை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மகா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளங்கள், வயல்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது, பிரமையாபுரத்தில் உள்ள சேகரின் வயலும் மழைநீரால் நிரம்பியது. மழைநீர் தொடர்ந்து வயலில் தேங்கி கிடந்ததால், வாழைப்பயிர்கள் அழுகி சேதம் அடைந்தன. இதனால் சேகர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மதியம் வயலுக்கு சென்ற சேகர், சேதம் அடைந்த வாழைப்பயிர்களை பார்த்து கண்ணீர் விட்டு உள்ளார். தொடர்ந்து வயலில் வைத்து வி‌‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சேகரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேகரின் மகன் முத்துசெல்வம் அளித்த புகாரின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே மழையால் வாழைப்பயிர் சேதம் அடைந்த வேதனையில் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருமானூர் அருகே, இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டி வரும் விவசாயி
திருமானூர் அருகே இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் வருவாய் ஈட்டி வருகிறார்.
2. குரங்குகளை விரட்ட நாய்க்கு புலி வேஷமிட்ட பலே விவசாயி
கர்நாடகாவில் தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை விரட்டுவதற்கு தனது வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் புலி வேஷமிட்டு அச்சுறுத்தியுள்ளார்.
3. தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு
காரிமங்கலம் அருகே தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
4. அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
5. சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட்டம்; போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள். சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.