மாவட்ட செய்திகள்

ராசிபுரம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு + "||" + Collector's Study of Development Projects in Rasipuram Union Area

ராசிபுரம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ராசிபுரம் ஒன்றிய பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
ராசிபுரம்,

ராசிபுரம் ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பொன்குறிச்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் அவர் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொன்குறிச்சி ஊராட்சி குட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதையும், தற்போது இந்த குட்டையில் மழைநீர் சேகரிக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டார்.


பொன்குறிச்சி ஊராட்சி பகுதியில் சாலையோரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், பி.ஆயிபாளையம் சர்க்கார் குட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவர் கரைப்பகுதிகளில் மரக்கன்றுகள் மற்றும் பனைமர விதைகளை நடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சிறப்பு முகாம்

பின்னர் 85-ஆர்.குமாரபாளையத்தில் பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுரே‌‌ஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்துவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த ஊராட்சியில் உள்ள நூலகத்தில் ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு சிறு கற்கள் மற்றும் மணல் நிரப்புமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

தொடர்ந்து ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் கலந்துகொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

கலெக்டரின் இந்த ஆய்வின்போது ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கிரு‌‌ஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காரைக்கால் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன் கலெக்டர் பேட்டி
காரைக்கால் மாவட்டமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறினார்.
2. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. பிளாஸ்டிக் இல்லாத நிலை தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
பிளாஸ்டிக் இல்லாத நிலை தொடர அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
4. மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
திருவாரூரில் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
5. கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு
கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.