மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் + "||" + 2 tonnes of rice seized from Nagercoil on a train to Kerala

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வாகனங்களிலும், ரெயில்களிலும் கடத்தி வருகிறார்கள். இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன் தலைமையில் துணை தாசில்தார் அருள்லிங்கம், ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் திருவனந்தபுரத்துக்கு செல்ல தயாராக இருந்த ரெயிலில் ஏறி தீவிர சோதனை நடத்தினர்.

கழிவறையில்...

அப்போது ரெயிலில் பயணிகள் இருக்கைகளின் கீழ் மற்றும் கழிவறையில் சிறு சிறு மூடைகளில் ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல யாரோ மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் மர்ம நபர்கள் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ரெயிலில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள அரசு குடோனில் ஒப்படைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ரெயில்களில் அதிரடி சோதனை
அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
3. சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை
சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.
4. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்
திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூரில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, கணக்கில் வராத ரூ.2¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5. காரில் கடத்தப்பட்ட 716 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
நாகை அருகே காரில் கடத்தப்பட்ட 716 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.