மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் இல்லா பொருட்கள் கண்காட்சி அரியலூரில் இன்று தொடக்கம் + "||" + Plastic-free materials exhibition begins today at Ariyalur

பிளாஸ்டிக் இல்லா பொருட்கள் கண்காட்சி அரியலூரில் இன்று தொடக்கம்

பிளாஸ்டிக் இல்லா பொருட்கள் கண்காட்சி அரியலூரில் இன்று தொடக்கம்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருட்களின் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இன்றும், நாளையும் அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருட்களின் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரை கொண்டு மாணவர்களுக்கான பேனா, பென்சில் செய்து உபயோகித்தல், கரும்பு சக்கை, மக்காச்சோள கழிவுகளில் இருந்து மக்கும் தேநீர் குவளைகள், உணவு உண்ணும் தட்டுகள் செய்தல், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சேப்டி நாப்கின், பருத்தி நூலால் செய்யப்பட்ட பைகள், தேங்காய் மட்டை, கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படும் சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.


கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து அதில் மக்களுக்கு பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும் கண்காட்சியில் பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாட்டு, நடனம், பேச்சு, கவிதை போன்ற கண்கவரும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியில் பாரம்பரிய உணவுகள் விற்பனையும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வும் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தின் நலன் கருதியும் மக்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் 460 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு
நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் 460 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வழங்கினார்.
2. ஏற்காட்டில் மலர் கண்காட்சி ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
ஏற்காட்டில் மலர் கண்காட்சி ஏற்பாடுகளை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. மரபுசாரா எரிசக்தி மின்சாரம் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் தங்கமணி பேட்டி
மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
4. நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி தொடங்கியது
நாகர்கோவிலில் நேற்று புத்தக கண்காட்சி தொடங்கியது.
5. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 3 ஆண்டில் செய்துள்ளார்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 3 ஆண்டில் செய்துள்ளார் என்று அமைச் சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. கூறினர்.