மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பரிதாபம்: பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Pity in Tirupur: Suicide by female advocate

திருப்பூரில் பரிதாபம்: பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் பரிதாபம்: பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனுப்பர்பாளையம், 

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு அலமேலுநகரை சேர்ந்தவர் பூபதி (வயது 53). இவருடைய மகள் மோகனபிரியா (26). இவர் ஒரு வக்கீலிடம் ஜூனியர் வக்கீலாக பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் மோகனபிரியா நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மோகனபிரியா ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த மோகனபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஆவடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. தாய்க்கு உடல் நிலை சரி இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தாய்க்கு உடல் நிலை சரிஇல்லாததால் தன்னை தவிக்கவிட்டு இறந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. ஆத்தூர் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வீட்டு செலவுக்கு கணவர்-மகன்கள் பணம் கொடுக்காததால் சோக முடிவு
ஆத்தூர் அருகே வீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.