கர்நாடகத்தில் மின் பற்றாக்குறை? எடியூரப்பா பேட்டி
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹாவேரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த 100 நாட்களில் வெள்ள பாதிப்புகளில் சிக்கிய மக்களுக்கு உதவும் பணியை மேற்கொண்டேன். அடுத்த 100 நாட்கள், மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவேன்.
பிரதமரின் சம்மான் திட்டத்தில் கூடுதலாக மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு ரூ.4,000 வழங்குவதாக அறிவித்தேன். அதில் ரூ.2,000 விடுவித்துள்ளோம். கர்நாடகத்தில் மின்சார பற்றாக்குறை பிரச்சினை இல்லை. மின் உற்பத்தி நன்றாக உள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம் அதிகமாக உற்பத்தியாவது சாதனை ஆகும்.
தேவேகவுடா என்னுடன் பேசியதாக வெளியான தகவல் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. தேவைப்படும்போது அதுபற்றி பேசுகிறேன். எனக்கும், அவருக்கும் இடையிலான உறவு நன்றாக உள்ளது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story