நாகர்கோவில் அருகே, திருமண ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை


நாகர்கோவில் அருகே, திருமண ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2019 4:15 AM IST (Updated: 9 Nov 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஏக்கத்தில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 33), கொத்தனார். ராஜலிங்கத்துக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால், சரியாக பெண் அமையாததால் திருமணம் முடிவாகவில்லை.

இதனால், தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று ராஜலிங்கம் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது ராஜலிங்கம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இதுகுறித்து ராஜலிங்கத்தின் தந்தை பால்பாண்டியன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story