அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வெளியாகிறது. இதையொட்டி போலீஸ் உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரவுள்ளதால், கர்நாடகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடியூரப்பா உத்தரவிட்டார்.
முக்கியமாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, மடிகேரி, மைசூரு, சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, உப்பள்ளி-தார்வார், பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையம், பஸ் நிலையங்கள், பெரிய வணிக வளாகங்கள், மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், விதான சவுதா, விகாச சவுதா, கவர்னர் மாளிகை, ஐகோர்ட்டு, சந்தைகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் அதிக எண்ணிக்கையில் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்று எடியூரப்பா அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story