வேடசந்தூர் அருகே, தாய்-தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர்


வேடசந்தூர் அருகே, தாய்-தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 6:28 PM GMT)

வேடசந்தூர் அருகே தாய்-தந்தையை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபிள்ளையூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (50). இவர்களுக்கு செந்தில்குமார் (30) என்ற மகன் உள்ளார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று செந்தில்குமார் வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டிருந்தார். இதனால் உடனிருந்த அவரது பெற்றோர் சத்தம் போடாதே என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து சத்தம் போட்டப்படி இருந்தார். இதனால் அவரை வீட்டினுள் அழைத்துள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து தனது தாய், தந்தை என்று பாராமல் சுந்தர்ராஜ், மாரியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தாய், தந்தையை அரிவாளால் வெட்டிய செந்தில்குமாரை அப்பகுதி பொதுமக்கள் நாற்காலியில் கட்டி வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரை போலீஸ் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story