மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே, வயலில் நிர்வாண நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை + "||" + Near Cuddalore Worker corpse in the field naked Murder? Police are investigating

கடலூர் அருகே, வயலில் நிர்வாண நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

கடலூர் அருகே, வயலில் நிர்வாண நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
கடலூர் அருகே வயலில் நிர்வாண நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு வயலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதைஅந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, இதுபற்றி ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர் களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த முத்தாலன் (வயது 48) என்பதும், செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் கடந்த 7-ந்தேதி வீட்டில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வயலில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து முத்தாலனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்தாலன் மனைவி ஜமுனா ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தாலனை யாரேனும் அடித்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் நிர்வாண நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணம் மதுவுக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தகவல்
திருப்போரூர் அருகே பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தவர் மதுவுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.