திருமணமான 6 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை கர்ப்பம் கலைந்ததால் விபரீத முடிவு


திருமணமான 6 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை கர்ப்பம் கலைந்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 10 Nov 2019 4:45 AM IST (Updated: 10 Nov 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால் விஷம் குடித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடியை சேர்ந்த நாகராஜின் மகன் பிரதாப் (வயது 30). முதியனூர் கிராமத்தை சேர்ந்த புட்டுசாமியின் மகள் பல்லவி என்கிற சரஸ்வதி (23). இவர் பி.இ. சிவில் படித்து முடித்திருந்தார். இந்தநிலையில் பிரதாப்புக்கும், சரஸ்வதிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு சரஸ்வதி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பினார். இதனால் காரைக்குடியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். மேலும் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவளியையொட்டி சரஸ்வதி கடந்த மாதம் மெட்டல்வாடி வந்தார். அப்போது அவருக்கு கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். மேலும் அதையே நினைத்து அவர் கவலைப்பட்டுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர். எனினும் அவர் ஆறுதல் அடையவில்லை. இந்தநிலையில் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 5-ந் தேதி சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுவிட்டார். இதனால் அவர் வாந்தி எடுத்தார்.

இதுபற்றிய தெரியவரவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து சரஸ்வதியின் தந்தை புட்டுசாமி தாளவாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story