பேரிடர் கால முன்னேற்பாடு விழிப்புணர்வு முகாம் - அமைச்சர் பங்கேற்பு


பேரிடர் கால முன்னேற்பாடு விழிப்புணர்வு முகாம் - அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 4:15 AM IST (Updated: 10 Nov 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு விழிப்புணர்வு முகாம் வண்டலூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.

வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இயற்கை பேரிடர்களின் போது நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதற்கு அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் உதயகுமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு முன்பாக தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு படைகளின் விழிப்புணர்வு செயல்முறை விளக்கத்தை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் மற்றும் ரெயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, சென்னை கூடுதல் காவல்துறை இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் சீனிவாஸ், மாம்பாக்கம் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கொண்டல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story