ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வாதார சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்


ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வாதார சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:20 PM GMT (Updated: 9 Nov 2019 10:20 PM GMT)

ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வாதார சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வருங்கால வைப்புநிதி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் வரும் 2020-ம் ஆண்டுக்கான மின்னணு வாழ்வாதார மற்றும் மறுமணம் ஆகா சான்றிதழை அவரவர் மாதாந்திர ஓய்வூதியம் பெரும் வங்கிகளில் 31.12.2019க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

புதுச்சேரி வருங்கால வைப்புநிதி அலுவலகம் மூலம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே 2020-ம் ஆண்டுக்கான மின்னணு வாழ்வாதார மற்றும் மறுமணம் ஆகா சான்றிதழை அவரவர் வங்கிகளில் சமர்ப்பிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வசதியை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய மின்னணு உயிர்வாழ் சான்றிதழை தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்கலாம்.

நிறுத்தி வைக்கப்படும்

இந்த சேவையில் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் அல்லது வருங்கால வைப்பு நிதி ஆணையரை(ஓய்வூதியம்) தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் வங்கிகள் ஓய்வூதியதார்களின் உயிர்வாழ் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பது வங்கிகளின் கடமையாகும். மேலும் இந்த வசதியை பொதுசேவை மையங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். உயர்வாழ் சான்றிதழை பதிவு செய்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு நகல், ஓய்வூதிய ஆவண எண் மற்றும் கைபேசியுடன் வங்கி கிளைக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம். மின்னணு வாழ்வாதார சான்றிதழை புதுப்பிக்க தவறிய ஓய்வூதியதார்களின் ஓய்வூதியம் ஜனவரி 2020 முதல் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story