அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பா.ஜனதா, அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தாது - தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு,
அயோத்தி வழக்கில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. இந்த தீர்ப்பை பா.ஜனதா அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துமா? என்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் இதை பா.ஜனதா அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தாது என்று நம்புகிறேன்.
இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்கள், நமது நாட்டின் அடிப்படை தத்துவங்கள், அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை மற்றும் மதசார்பற்ற கொள்கை ஆகியவற்றை பலப்படுத்துவதாக உள்ளது. நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story