திருக்கோவிலூர் அருகே, அங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை


திருக்கோவிலூர் அருகே, அங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 5:39 PM GMT)

திருக்கோவிலூர் அருகே உள்ள அங்காளம்மன் அம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளை போனது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்துள்ள கொள்ளுர் கிராமத்தின் ஏரிக்கரையில் ஸ்ரீஅங்காளம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெண்கள் அதிகமாக வந்து வழிபட்டு செல்வது வழக்கம். அதிலும் அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலை பூஜாரிகள் பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மனின் கழுத்தில் கிடந்த சுமார் 2 பவுன் மதிப்புள்ள தாலிக்காசு மற்றும் உண்டியலில் இருந்த 2 லட்சம் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதையும், உள்ளே பொருட்கள் கலைந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடன் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அரகண்டநல்லு£ர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசாரை அமைத்து உத்தரவிட்டார். அங்காளம்மன் கோவிலில் பணம், நகை கொள்ளை போன சம்பவம் திருக்கோவிலு£ர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story