குதிரை வண்டி-சைக்கிள் பந்தயம்


குதிரை வண்டி-சைக்கிள் பந்தயம்
x
தினத்தந்தி 11 Nov 2019 4:00 AM IST (Updated: 11 Nov 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் குதிரை வண்டி மற்றும் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் 33-வது ஆண்டு குதிரை வண்டி பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பந்தயத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரை வண்டிகள் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இதில் குதிரை வண்டி பந்தயம் பெரிய குதிரை வண்டி, நடு குதிரை வண்டி, சிறிய குதிரை வண்டி, புதுக்குதிரை வண்டி ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பெரிய குதிரை வண்டி பிரிவில் 8 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கோவை ஆண்டவர் குதிரை வண்டி முதல் பரிசையும், மச்சுவாடி டெல்லி பிச்சையா குதிரை வண்டி 2-வது பரிசையும், சந்தைப்பேட்டை மதன் குரூப்ஸ் குதிரை வண்டி 3-வது பரிசையும் பெற்றன.

நடுகுதிரை வண்டி பிரிவு

இதேபோல நடுகுதிரை வண்டி பிரிவில் 9 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் அன்னூர் மூர்த்தி குரூப்ஸ் குதிரை வண்டி முதல் இடத்தையும், காளியம்மன் மதுராயன் சார்ஜன் குதிரை வண்டி 2-வது பரிசையும், மச்சுவாடி டெல்லி பிச்சையா குதிரை வண்டி 3-வது பரிசையும் பெற்றன. சிறிய குதிரை வண்டி பிரிவில் 12 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் திருச்சி உறையூர் விஜயா குதிரை வண்டி முதல் பரிசையும், திருச்சி மணிகண்டம் பாத்திமா ஆசிக் குதிரை வண்டி 2-வது பரிசையும், சந்தைப்பேட்டை மதன் குரூப்ஸ் 3-வது பரிசையும் பெற்றன.

புதுக்குதிரை வண்டி பிரிவில் 13 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. திருச்சி மணிகண்டம் பாத்திமா ஆசிக் குதிரை வண்டி முதல் பரிசையும், திருச்சி லால்குடி மண்சுறா குதிரை வண்டி 2-வது பரிசையும், புதுக்கோட்டை மீண்டும் செந்தில்பாலா குதிரை வண்டி 3-வது பரிசையும் பெற்றன.

சைக்கிள் பந்தயம்

இதேபோல சைக்கிள் பந்தயத்தில் 10 பேர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி சிவா முதல் பரிசையும், திருச்சி குணசேகர் 2-வது பரிசையும், புதுக்கோட்டை ஜாபல்அலி 3-வது பரிசையும் பெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சைக்கிள் பந்தய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த குதிரை வண்டி மற்றும் சைக்கிள் பந்தயத்தை புதுக்கோட்டையை சேர்ந்த திரளான பொதுமக்கள் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

Next Story