தமிழகத்தில் உர தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
தமிழகத்தில் உர தட்டுப் பாடு இல்லை என வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு கூறினார்.
கும்பகோணம்,
சீனாவில் நடந்த சர்வதேச அளவிலான ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டிகளில் மாற்றுத்திறனாளி வீரர் ஆனந்தன் 3 தங்க பதக்கங்களை வென்றார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி கும்பகோணம் குடிநீர் வடிகால் வாரிய திட்ட இல்லத்தில் நடந்தது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு ஆனந்தனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் துரைக்கண்ணு பேசியதாவது:-
ராணுவவீரர் ஆனந்தன் சர்வதேச அளவில் நடந்த தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உர தட்டுப்பாடு என்பதே இல்லை. சம்பா, தாளடி மட்டுமின்றி எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு 33 ஆயிரம் டன் யூரியா சீனாவில் இருந்து காரைக்காலுக்கு வரவழைக்கப் பட்டுள்ளது. அங்கிருந்து லாரி மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Related Tags :
Next Story