பள்ளிபாளையம் அருகே கோவில் வேல்கள் மீது கார் மோதியது


பள்ளிபாளையம் அருகே கோவில் வேல்கள் மீது கார் மோதியது
x
தினத்தந்தி 11 Nov 2019 4:00 AM IST (Updated: 11 Nov 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே கோவில் வேல்கள் மீது கார் மோதியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளிபாளையம்,

ஈரோட்டில் இருந்து ஒரு வாடகை கார் நேற்று அதிகாலை பள்ளிபாளையம் அருகே காவிரி ஆர்.எஸ்.பகுதிக்கு வந்தது. அங்கு பயணிகளை இறக்கி விட்ட பின்னர் அங்கிருந்து ஈரோடு நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.

காலை 7 மணியளவில் காவிரி ஆர்.எஸ். பகுதியில் ரோட்டு ஓரம் உள்ள புதுமாரியம்மன் கோவில் அருகில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கோவில் முன்புள்ள வேல்கள் மீது மோதியது. அதன்பின்னர் அருகில் உள்ள விசைத்தறி கூடத்தின் மீது மோதி நின்றது.

பரபரப்பு

இதை பார்த்ததும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து காரை மீட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் காரை எடுத்து சென்றனர். இந்த விபத்தில் டிரைவர் லேசான காயம் அடைந்தார்.

டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story