‘ஹிட்லருடன் ஒப்பிட்டு’ தேவேந்திர பட்னாவிஸ் மீது சஞ்சய் ராவத் கடும் தாக்கு


‘ஹிட்லருடன் ஒப்பிட்டு’ தேவேந்திர பட்னாவிஸ் மீது சஞ்சய் ராவத் கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 Nov 2019 11:15 PM GMT (Updated: 10 Nov 2019 9:44 PM GMT)

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை ஹிட்லருடன் ஒப்பிட்டு சஞ்சய் ராவத் விமா்சனம் செய்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் முதல்- மந்திரி பதவி தொடர்பாக பா.ஜனதா, சிவசேனா இடையே எழுந்த மோதல் காரணமாக புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது காபந்து முதல்-மந்திரியாக உள்ள தேவேந்திர பட்னாவிஸ், முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு விட்டு தரமுடியாது என கூறினார்.

அப்போது முதல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில் சஞ்சய் ராவத் பெயரை குறிப்பிடாமல் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை ஹிட்லருடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அரசியல் ஆதரவு மற்றும் பல வழிகளில் மிரட்டியும் வேலை நடக்கவில்லை. ஹிட்லர் மறைந்துவிட்டார் என்பதை நாம் இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டும். அடிமைத்தனத்தின் மேகங்கள் மறைந்துவிட்டன’’ என கூறியுள்ளார்.

மேலும் அவர் பிரதமர் மோடியின் ஆதரவு இருந்து தேவேந்திர பட்னாவிசால் மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியவில்லை. அமித்ஷா மராட்டியத்தில் தற்போது நிலவி வரும் பிரச்சினையில் இருந்து விலகி இருப்பதே தேவேந்திர பட்னாவிசால் பதவி ஏற்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள் ளார்.

இதேபோல முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் சிவசேனா பேச விரும்பாதது அவா்களின் (பா.ஜனதா) மிகப்பெரிய தோல்வி. அடுத்த முதல்-மந்திரி யார் என்பதை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தான் முடிவு செய்வார். அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு மற்றவர்களை மிரட்டி வந்தவர்கள் தற்போது பயந்து போய் உள்ளனர் எனவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளாா்.

Next Story