தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயம்: கங்கைகொண்டான் அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகை


தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயம்: கங்கைகொண்டான் அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 6:45 PM GMT)

தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயம் அடைந்ததால், கங்கைகொண்டான் அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கயத்தாறு,

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ்-1 மாணவரை, சரியாக முடி வெட்டவில்லை என்று கூறி தலைமை ஆசிரியர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாணவர் கங்கைகொண்டான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற் றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் நேற்று பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவரின் தாயார் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story