ரூ.3 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு வருகிறது - நாராயணசாமி தகவல்
புதுச்சேரிக்குரூ.3 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு வர உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும்மலேசிய தொழில்வர்த்தக அமைப்பின் அழைப்பினை ஏற்று நானும், அமைச்சர் ஷாஜகானும், பிப்டிக் தலைவர் சிவாஎம்.எல்.ஏ.வும்சிங்கப்பூர்சென்றோம். அரசுமுறை பயணமாகஇல்லாமல் தனிப்பட்டபயணமாக சென்றோம். கடந்த 7-ந்தேதிவிமான தள கட்டுமானநிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவரகள் இந்தியாவில் ஐதராபாத், டெல்லியில் விமானநிலைய கட்டுமானபணியைசெய்தவர்கள்.
அவர்களிடம் புதுவை விமான நிலையவிரிவாக்கப் பணிகளைமேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைநடத்தினோம். அப்போதுகரசூர்பகுதியில் புதிய விமான நிலையம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க பேசி உள்ளோம்.எங்களதுபேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது.
தொடர்ந்து தொழில் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேசினோம். அப்போது புதுவையில்ஐ.டி.பார்க்,சுற்றுலாவளர்ச்சி திட்டங்களில்முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். காரைக்காலில்ரூ.1,500 கோடியில்கண்ணாடி தொழிற்சாலைஅமைக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர். சிங்கப்பூரில் வசிக்கும் திருவாரூர் தொழில் அதிபர்கள் காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்ட தயாராக உள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் மால் கட்டவும் (வணிக வளாகம்) ஆர்வமாக உள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் உள்ள நிலங்களைமுறையாக பயன்படுத்துவது தொடர்பாக பேசிவருகிறோம்.
எங்கள் சிங்கப்பூர் பயணத்தின்போது உலக அளவில் 3-வதுஇடத்தில் உள்ளயாங்யாங்பல்கலைக்கழக இயக்குனர், துணைவேந்தரை சந்தித்து பேசினோம். அப்போது புதுவை மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு அங்கு இடம்தருவதாக கூறியுள்ளனர். புதுவை மாநிலத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்துவேலைவாய்ப்பினைபெருக்குவதுதான் எங்கள் பயணத்தின் நோக்கம்.
காரைக்காலில்கண்ணாடி தொழிற்சாலைவந்தால் 1000 பேருக்குவேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வந்தால் சுமார் 300 பேருக்குவேலை கிடைக்கும்.கண்ணாடி தொழிற்சாலைக்குரூ.1000 கோடி,சுற்றுலா திட்டங்களுக்குரூ.1000 கோடி, தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்குசுமார் 200 கோடி என கிட்டத்தட்ட சுமார்ரூ.3 ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு முதலீடு புதுவைக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சுற்றுலாவை மேம்படுத்த குஜராத் நிறுவனம் ஒன்று சென்னை, புதுச்சேரி, காரைக்கால்வழியாக கன்னியாகுமாரிவரை பயணிகள் கப்பல்போக்குவரத்தை தொடங்கமுன்வந்துள்ளது. இதுதொடர்பாக வருகிற 20-ந்தேதிவரை பேச உள்ளோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Related Tags :
Next Story