வானவில் : ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர் கேமரா
உங்கள் வீட்டில் சாதாரண ரெப்ரிஜிரேட்டர் உள்ளதா?. அதை நவீனமானதாக அதாவது ஸ்மார்ட் பிரிட்ஜாக மாற்ற உதவுகிறது இந்த கேமரா. இதை எந்த மாடல் பிரிட்ஜிலும் நிறுவலாம்.
இந்த கேமரா பிரிட்ஜில் உள்ள உணவுப் பொருட்களை அப்படியே உங்கள் மொபைலில் பார்க்கும் வசதியை அளிக்கும். இதனால் காய்கறிக் கடைக்குப் போன பிறகும் எந்தெந்த காய், கனிகளை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டால், ஸ்மார்ட்போனை ஆன் செய்து வீட்டில் உள்ள பிரிட்ஜில் என்னென்ன காய்கறிகள், பழங்கள் உள்ளன என்ற விவரத்தை தெரிந்துகொண்டு, பிரிட்ஜில் இல்லாத காய்கள், பழங்களை வாங்கலாம்.
இந்த கேமரா உங்கள் வீட்டில் உள்ள வை-பை இணைப்பு மூலம் செயல்படும். இந்த கேமராவுக்கான செயலியை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்த உடனேயே பிரிட்ஜில் உள்ள கேமரா ஆன்ஆகி பிரிட்ஜின் உள்தோற்றத்தை அப்படியே காட்டும். இதை பிரிட்ஜில் நிறுவுவது எளிது. இதன் விலை சுமார் ரூ.5,600.
Related Tags :
Next Story