வானவில் : ரெட்மி புக் 14 ரிஸென் எடிஷன்


வானவில் : ரெட்மி புக் 14 ரிஸென் எடிஷன்
x
தினத்தந்தி 13 Nov 2019 4:06 PM IST (Updated: 13 Nov 2019 4:06 PM IST)
t-max-icont-min-icon

ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி நிறுவனம் ஏ.எம்.டி. நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

‘ரெட்மி புக் 14 ரிஸென்’ என்ற பெயரில் இது அறிமுகமாகிஉள்ளது. இதில் ஏ.எம்.டி. ரிஸென் பிராசஸர் இடம்பெற்றுள்ளது. இது முந்தைய ரெட்மி புக் 14 மாடலை விட 10 சதவீதம் கூடுதல் செயல் திறன் கொண்டதாக வந்துள்ளது.

இதில் ஏ.எம்.டி. ரேடியோன் வேகா கிராபிக் கார்டு உள்ளது, இதன் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. வர்த்தக ரீதியிலான செயல்பாடு மட்டுமின்றி பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்கும் ஏற்றதாக இது திகழ்கிறது.

இதில் வெப்பத்தைக் குறைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான பேன் மற்றும் காற்று சென்றுவர வசதி உள்ளதால் நீண்ட நேரம், கடினமான பணிகளை செயல்படுத்தினாலும் இது வெப்பமடைவது குறையும்.

இதில் 4 ஜி.பி ரேம், 256 ஜி.பி நினைவக திறன் உள்ளது. இது 14 அங்குல திரை 5.75 மி.மீ. தடிமன் கொண்டதாக வந்துள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 10 மணி நேரம் செயல் படும் திறன் கொண்டது. அதேபோல 35 நிமிடத்தில் 50 சதவீத அளவுக்கு பேட்டரி சார்ஜ் ஆகி விடும். வழக்கமான சில்வர் நிறம் தவிர்த்து கிரே நிறத்திலும் இது வந்துள்ளது. ஜியோமி இணையத்தளம் மூலம் இதை வாங்கலாம்.

Next Story