தண்டையார்பேட்டையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
தண்டையார்பேட்டையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
பெரம்பூர்,
சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி கட்டிடத்தில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வடசென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மாதவரம் சுதர்சனம் தலைமை தாங்கினார். பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வடசென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி வரவேற்றார்.
விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்துவைத்தார். இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ரங்கநாதன், பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன், வடசென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் பிரிவு அமைப்பாளர் மருது கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story