மகள் அபகரித்த வீடு பெற்றோரிடம் ஒப்படைப்பு கலெக்டர் நடவடிக்கை
திருவள்ளூர் அருகே மகள் அபகரித்த வீட்டை பெற்றோரிடம் ஒப்படைத்து கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலை சேர்ந்தவர் ராஜா (வயது 68). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டை அவரது 2-வது மகளான யமுனா தன்னுடைய பெயருக்கு தானப்பத்திரபதிவு செய்து பெற்றுக்கொண்டார்.
இது குறித்து ராஜா தன்னுடைய மகளிடம் கேட்டபோது அவர் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார்.
வீட்டுக்கான பத்திரம் ஒப்படைப்பு
இது குறித்து ராஜா மனைவி கலைச்செல்வியுடன் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்திந்து தன்னுடைய வீட்டை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து கலெக் டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்த தானப்பத்திர பதிவை ரத்து செய்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு விதிகளின்படி ராஜா, கலைச்செல்வி தம்பதியிடம் வீட்டுக்கான பத்திரத்தை ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story