தவறான நிர்வாகம், அரசியல் செய்பவர்கள் தான் மக்கள் நீதி மய்யத்தை கண்டு பயப்பட வேண்டும் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் அறிக்கை


தவறான நிர்வாகம், அரசியல் செய்பவர்கள் தான் மக்கள் நீதி மய்யத்தை கண்டு பயப்பட வேண்டும் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் அறிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2019 4:00 AM IST (Updated: 14 Nov 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

தவறான நிர்வாகம், அரசியல் செய்பவர்கள் தான் மக்கள் நீதி மய்யத்தை கண்டு பயப்பட வேண்டும் என்று டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் கூறியுள்ளார்.

புதுச்சேரி, 

தவறான நிர்வாகம், அரசியல் செய்பவர்கள் தான் மக்கள் நீதி மய்யத்தை கண்டு பயப்பட வேண்டும் என்று டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்ய புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விமர்சனம் செய்துள்ளார்

ஜனநாயக நாட்டில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரலாம். அந்தவகையில் தான் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற அரசியல் கட்சியை தொடங்கி நல்லாட்சியும் வழங்கினார். அவர் மறைவிற்கு பின்னர் அந்த கட்சியில் சேவை குறைந்து, தவறான நிர்வாகம் தலை தூக்கியது. இது தற்போது உச்சத்தில் உள்ளது. இதனால் தூய்மையான அரசியலை கொண்டுவந்து, நல்ல நிர்வாகத்தை கொடுத்து, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து செயல்பட்டு வருகின்றார்.

தனது மக்கள் சேவையின் ஒரு பகுதியாகதான் தமிழகத்தில் மக்களுக்கு சிறந்த சேவை செய்யக்கூடிய அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து சுட்டிக் காட்டினார். இதையேற்று தன்னை சீர்படுத்திக் கொண்டு சிறந்த நிர்வாகத்தை தருவதற்கு மாறாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்.

பயப்பட வேண்டும்

2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கே அனைத்தையும் வென்று விட்டதாக தமிழக முதல்-அமைச்சர் நினைக்கக்கூடாது. கமல்ஹாசன் அரசியலை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்கவில்லை. அவர் நடிக்க வரமாட்டாரா? என்று அனைத்து திரைத்துறையினரும் எதிர்பார்த்து உள்ளனர். வயதாகி படவாய்ப்பு இல்லாததால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவில்லை. தவறான நிர்வாகம் தருபவர்களும், தவறான அரசியல் செய்பவர்களும் தான் மக்கள் நீதி மய்யத்தை கண்டு பயப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story