சிங்கப்பூர் பயணம்: அமைச்சர் ஷாஜகானுக்கான அனுமதி கடிதம் எங்கே? முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பெடி கேள்வி
சிங்கப்பூர் சென்றதற்கு அமைச்சர் ஷாஜகானுக்கான அனுமதி கடிதம் எங்கே என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
சிங்கப்பூர் சென்றதற்கு அமைச்சர் ஷாஜகானுக்கான அனுமதி கடிதம் எங்கே என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு பயணம்
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் அரசு முறை பயணமாக கடந்த 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அங்கு தொழில் அதிபர்களையும், முதலீட்டாளர்களையும் சந்தித்து பேசினர். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிநாட்டு சுற்று பயணத்திற்கு அனுமதி பெற வில்லை என்று கவர்னர் கிரண்பெடி குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, நான் பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோரிடம் அனுமதி பெற்று விட்டேன். நான் மத்திய மந்திரியாக இருந்தவன். எனக்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரியும். யாருக்கும் அடிமையில்லை என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விளக்கம் அளிக்க வேண்டும்
மீண்டும் தவறாக வழி நடத்தப்படுகிறது. இதை சொல்வதில் வருந்துகிறேன். இது ஒரு சுய மதிப்பீடு. இதை மீண்டும் தொடங்கியுள்ளீர்கள். இது ஒழுங்கற்றது. எதற்காக வெளிநாடு சென்றீர்கள் என்பதை முதல்-அமைச்சர் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க முடியுமா? அனுமதியை பின்பற்றுவதற்கான அனைத்து செயல்முறைகள் இருப்பதாக தெரியவில்லை. இதுபோல் அனைவரும் துபாய்க்கு பயணம் செய்ய முடியுமா? என்பதையும் முதல்-அமைச்சர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
அனுமதி அளிப்பவர்கள் எதற்காக, யாருக்காக இருக்கின்றனர் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள். இலங்கைக்கு அமைச்சர்களின் பயணமும் இதுபோல்தான் இருந்தது. அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க முடியுமா? மத்திய அரசின் அனுமதி உள்ளதா? நிர்வாகியின் அலுவலகத்தில் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை. தற்போது நீங்கள் மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கலாம். இது வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்தும்.
அனுமதி கடிதம் எங்கே?
முதல்-அமைச்சருடன் சிங்கப்பூர் சென்றிருந்த அமைச்சருக்கான அனுமதி கடிதம் எங்கே? சொந்தமாக நீங்களே நிர்வாக அனுமதி கொடுத்து கொண்டீர்களா? இதுபோல் ஒரு அரசு ஊழியர் உங்களிடம் தெரிவித்துவிட்டு வெளிநாட்டிற்கு செல்ல முடியுமா? அவ்வாறு சென்றதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story