சிவசேனாவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சி: குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க 5 பேர் குழு தேசியவாத காங்கிரஸ் அமைத்தது


சிவசேனாவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சி: குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க 5 பேர் குழு தேசியவாத காங்கிரஸ் அமைத்தது
x
தினத்தந்தி 14 Nov 2019 4:00 AM IST (Updated: 14 Nov 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சிவசேனாவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க 5 பேர் கொண்ட குழுவை தேசியவாத காங்கிரஸ் அமைத்தது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனாவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க 5 பேர் கொண்ட குழுவை தேசியவாத காங்கிரஸ் அமைத்தது.

தீவிரம் காட்டும் சிவசேனா

மராட்டியத்தில் அரசியல் குழப்பங்களை தொடர்ந்து நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொள்கை அளவில் வேறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மீண்டும் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் மும்பை வந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்காமல் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனாவுடன் பேச முடியாது என அவர்கள் முடிவு எடுத்தனர்.

5 பேர் குழு

இந்த நிலையில், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்காக குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு குழுக்களை அமைக்க இரண்டு கட்சிகளும் முடிவு செய்து உள்ளன.

இதன்படி நேற்று தேசியவாத காங்கிரஸ் அக்கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், மூத்த தலைவர்களான சகன் புஜ்பால், அஜித்பவார், மும்பை தலைவர் நவாப் மாலிக், சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது. மும்பையில் நடந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story