4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, ரேஷன் கடை பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி


4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, ரேஷன் கடை பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 15 Nov 2019 3:45 AM IST (Updated: 15 Nov 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூரில் ரேஷன் கடை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் 5 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் பொட்டலம் முறையிலும், சரியான எடையிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் கல்பாலம் அருகில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசீலன் தலைமையில் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், மாவட்ட செயலாளர் ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர்.

Next Story