ஊத்துக்கோட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை


ஊத்துக்கோட்டை அருகே  தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 Nov 2019 3:45 AM IST (Updated: 15 Nov 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

ஊத்துக்கோட்டை, 

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (வயது 35). விவசாயி. இவரது மனைவி விஜி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விஜி நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜி உயிரிழந்தார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story