உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 15 Nov 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில், மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். தி.மு.க. இளைஞரணிக்கு அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். 

வருகிற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வருகிற 20-ந் தேதி வரை கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story