குன்னூர்- ஊட்டி சாலையில், ஆபத்தான வளைவில் எச்சரிக்கை பலகை பொருத்தப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
குன்னூர்-ஊட்டி சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் எச்சரிக்கை பலகை பொருத்தப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
குன்னூர்,
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் வெலிங்டனில் கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கன்டோன்மெண்ட் பகுதி மக்கள் மட்டுமின்றி குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குன்னூர்-ஊட்டி சாலையில் வெலிங்டன் கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி அருகில் வளைவு ஒன்று உள்ளது. ஆனால் அங்கு சாலையோரத்தில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை.
இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குன்னூர்-ஊட்டி சாலையில் உள்ள அந்த ஆபத்தான வளைவில் எச்சரிக்கை பலகை பொருத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. வெலிங்டன் கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அருகில் செல்லும்போதும் வேகத்தை குறைப்பது இல்லை. இதனால் அங்குள்ள ஆபத்தான வளைவில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு காரணம் அந்த வளைவு குறித்து அவர்கள் அறியாததே ஆகும். இதனால் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டியது அவசியம். உள்ளூர் வாகன ஓட்டிகள் வளைவு இருப்பதை அறிந்து கவனமாக வாகனங்களை இயக்குகின்றனர். ஆனால் வெளியூர் வாகன ஓட்டிகள் அதை அறியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே குன்னூர்-ஊட்டி சாலையில் வெலிங்டன் கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி அருகில் ஆபத்தான வளைவு குறித்து எச்சரிக்கை பலகை வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story