கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணிகள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உலக தர தினத்தையொட்டி தூய்மை பணிகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக தர தினத்தையொட்டி “தூய்மை பேணுவோம் சுகாதாரம் காப்போம்“ என்ற விழிப்புணர்வாக தூய்மை பணியாளர்களுடன் மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக தர தினத்தையொட்டி தூய்மை பேணுவோம் சுகாதாரம் காப்போம் குறித்து அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நாம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். அதே போல் வீடுகளை சுற்றி தேவையற்ற பயன்பாட்டில் இல்லாத பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அன்றாடம் தூய்மை பணிகளை மேற்கொள்வதால் காலநிலைக்கேற்ப வரும் தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். வீட்டில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உலக தர தினத்தையெட்டி தூய்மை பேணுவோம், சுகாதாரம் காப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ஸ்ரீதரன், மருத்துவமனை நோய் தடுப்பு முறை அலுவலர் யாமினி, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு மருத்துவர் மனோகரன், டாக்டர்கள் செல்வி, ராஜலட்சுமி, பாரதி, கிருபாவதி, கைலாஷ், நாராயணசாமி மற்றும் கிருஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர், சந்திரராஜி, ஸ்மித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story